சகோதரி சகோதரர்களே!
உலகில் நீதி, நேர்மை நிறைந்த ஒரு சமூகத்தை நிறுவ எங்களின் பங்கைத்தர விழைகிறோம். “நீதியின் குரல்” என்பது உங்களைப் போன்ற, சமூக அக்கறை கொண்டவர்களின் ஆதரவு மூலம் ஒலிக்க முடியும். “நீதியின் குரல்” மாதம் ஒரு முறை வெளியிடப்படும். எமது முதல் பதிப்பு நவம்பர் 1, 2017 அன்று வெளிவரவிருக்கிறது. எமது இணையத்தளப் பதிப்பு செப்டம்பர் 19, 2017-இல் இருந்து தினமும் சுடச் சுட தகவல்களுடன் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
எமது குறிக்கோள்
உலகில் உரிமைகள் மறுக்கப்படுகின்ற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றிய விழிப்புணர்வை, உலகத்தின் பார்வைக்கு கொண்டுசெல்வதை தடைசெய்யும் போதும், நீதி மறுக்கப்படும்போதும் அனைத்து உரிமைகளும் பறிபோகிறது, உலகின் எந்தப் பகுதியிலும், எந்த நிலையிலும், அரசியல், சட்டம், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல், சுகாதாரம், பண்பாடு, பெண்ணுரிமை, முதியவர், குழந்தைகள் விவகாரம், என எந்தத் துறையிலும் இழைக்கப் பட்டிருக்கும் அநீதியை வெளிச்சமிட்டு காட்டும் நோக்குடன் இந்த “நீதியின் குரல்” ஆரம்பிக்கப்பட உள்ளது. உரிமை மறுக்கப்படும் மக்களின் துன்பங்களை விவரிக்க, உலகின் எந்த மொழியிலும் சொற்ப வார்த்தைகளே உள்ளன. “அவர்களின் குரல் கேட்கப்படாமலே இருக்கின்றன". உலக ஊடகங்கள் பெரும்பாலும், உலகக் கருத்துருவாக்கம் செய்யும் பணியைக் கட்டுப்படுத்தும் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
/சுயநலத்தின் போதையில் இருந்து விடுபட்டு இயங்கும், சுயசார்பு ஊடகம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதானதே. இந்தச் சூழலில், சில தன்னார்வ ஊடகவியலாளர்களும், கல்வியாளர்களும், இணையவழி மற்றும் அச்சுத்துறை இவற்றை பயன்படுத்தி, உலகிற்கு மனித உரிமைகளை எடுத்துரைத்து உணரவைக்கும் சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
எமது இந்த பதிப்பு, எந்தவொரு குறிப்பிட்ட கொள்கையையோ, குழுமத்தையோ, நிறுவனக் கட்டமைப்பையோ, குறிப்பிட்ட அரசையோ விமர்சிக்கும் நோக்கம் கொண்டதல்ல. “நீதியின் குரல்” பதிப்பின் முதன்மை குறிக்கோள் என்பதே, “மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மீது உலகின் கவன ஈர்ப்பு கொள்ளச்செய்வதன் மூலம், நீதி கிடைக்கும் ஒரு சிற்றங்கமாக இருப்பதுதான்.
எமக்கு உங்களின் ஆதரவு தேவை. ஆண்டுச் சந்தாவாக 12 பதிப்புகளுக்கு $ 12 அல்லது ஈராண்டுகள் - 24 பதிப்புகளுக்கு $ 20 சந்தாவாக செலுத்திட வேண்டுகிறோம். மேலதிகமாய் செலுத்தும் விருப்பம், வசதி உள்ளதெனில் நிதியளிப்பு, அன்பளிப்புச் செய்திடவும் வேண்டுகிறோம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஒப்புகைச் சீட்டு (இரசீது) வழங்கிடுவோம்.
நீங்கள் வணிக நிறுவனம் எனில், “நீதியின் குரல்”, தங்களைப் பற்றி பிறருக்கு எடுத்துரைக்க, உங்களின் பணி மற்றும் பொருட்கள் பற்றி விளம்பரம் மற்றும் பரப்புரை செய்ய நல்லதொரு சாதனமாகும். தங்களின் விளம்பர விபரங்களை எமது பதிப்பில் வடிவமைக்க, இன்றே எமக்கு அனுப்புங்கள். நீங்கள் கொடுக்கும் வணிக விவரங்களின் அடிப்படையில், தங்களுக்கான ஒரு விளம்பர வடிவமைப்பை நாங்கள் இலவசமாகவும் செய்து தருவோம். தங்களின் விவரங்கள் மற்றும் காசோலையை கீழ்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்:-
27-80 Nashdene Road
Toronto, ON M1V 5E4
Canada
Phone: (416) 723-7524
Email: info@voiceforjustice.ca