Breaking News
தித்வா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639
நாடளாவிய ரீதியில் 529 741 குடும்பங்களைச் சேர்ந்த 1 824 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தித்வா புயலால் ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களால் 09-12-2025 அன்று வரை 639 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, 203 பேர் காணாமல் போயுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 529 741 குடும்பங்களைச் சேர்ந்த 1 824 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
27 145 குடும்பங்களைச் சேர்ந்த 86 040 பேர் 878 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 5350 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 86 882 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.





