Breaking News
இந்திய விமானங்களுக்கான வான்வெளியை மூடுவதை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க பாகிஸ்தான் முடிவு
ஏப்ரல் 22 ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து புது டெல்லி எடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கடந்த மாதம் இந்தியாவுக்கான வான்வெளியை தடை செய்தது.

இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளியை மூடுவதை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து புது டெல்லி எடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கடந்த மாதம் இந்தியாவுக்கான வான்வெளியை தடை செய்தது.
பன்னாட்டுப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ) விதிகளின் கீழ், ஒரு நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், மே 23 வரை ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டது.