பாலியல் துன்புறுத்தலுக்கு இடமில்லை: அமைச்சர் பிமல்
பாதுகாப்பு என்பது ஒரு ஆடம்பரமான விடயமாக இல்லாமல், அது ஒரு உரிமையாக இருப்பதற்காக, செயற்பாடுகள் மற்றும் மேற்பார்வை முதல் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி வரையான போக்குவரத்து சீர்திருத்தங்களின் மையமாக நாங்கள் பாதுகாப்பை உள்வாங்கி வருகிறோம்.

பேருந்துகள், ரயில்கள் அல்லது நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு இடமில்லை என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டு வர தேசிய பிரசார அங்குராட்பண நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுப் போக்குவரத்தானது வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை இணைக்கும் ஒரு முக்கியமான இணைப்பாகும். ஆனால், பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, பொதுப் போக்குவரத்து என்பது அச்சத்தின் அடிப்படைக் காரணியாக மாறியுள்ளது.
எனவே, பாதுகாப்பு என்பது ஒரு ஆடம்பரமான விடயமாக இல்லாமல், அது ஒரு உரிமையாக இருப்பதற்காக, செயற்பாடுகள் மற்றும் மேற்பார்வை முதல் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி வரையான போக்குவரத்து சீர்திருத்தங்களின் மையமாக நாங்கள் பாதுகாப்பை உள்வாங்கி வருகிறோம்.
எங்கள் பேருந்துகள், ரயில்கள் அல்லது நிலையங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு இடமில்லை. பாதுகாப்பே நமது கடமை, அதை ஒரு யதார்த்தமாக்க நாம் இப்போதே செயல்பட வேண்டும் என்றார்.