பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீக்க கட்சி தலைவர்கள் இணக்கம்
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவி நீக்கம் செய்வதற்கான யோசனை கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பதவி நீக்கம் செய்வதற்கான யோசனை கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரேரணை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் உறுதிப்படுத்தப்பட்ட அதேவேளை, ஆளும் கட்சியின் பிரதிநிதிகளும் பிரேரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கையொப்பமிடப்பட்ட பிரேரணையின் மூலம் சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ரஹீம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிடக் கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.