Breaking News
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார விளக்கமறியலில் வைப்பு
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (1) கைது செய்யப்பட்டார்.

சமூக ஆர்வலர் நாமல் குமாரவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (1) கைது செய்யப்பட்டார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.