2024 நவம்பரில் கொழும்பின் பணவீக்கம் -2.1% ஆக குறைகிறது
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்பட்டவாறான ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 2024 நவம்பரில் -2.1% ஆக இருப்பதுடன் 2024 அக்டோபர் மாதத்திற்காக கணக்கிடப்பட்ட ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் -0.8% ஆக இருந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்பட்டவாறான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது 2024 அக்டோபரில் -0.8% உடன் ஒப்பிடுகையில் 2024 நவெம்பரில் -2.1% க்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
2024 நவம்பர் மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்குமான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 189.4 ஆக இருந்ததுடன் சுட்டெண் 189.9 ஆக இருந்த 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.5 சுட்டெண் புள்ளிகள் அல்லது 0.25 சதவீத வீழ்ச்சியினைப் பதிவுசெய்கின்றது. இது "சந்தைக் கூடையில்" செலவுப் பெறுமதியில் ரூபா 427.75 வீழ்ச்சியைக் குறிக்கிறது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்பட்டவாறான ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 2024 நவம்பரில் -2.1% ஆக இருப்பதுடன் 2024 அக்டோபர் மாதத்திற்காக கணக்கிடப்பட்ட ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் -0.8% ஆக இருந்தது.
உணவுக் குழுவின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அக்டோபர் 2024 இல் 1,0% இலிருந்து நவம்பர் 2024 இல் 0.6% ஆக குறைந்துள்ளது மற்றும் உணவல்லாத குழுவின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அக்டோபர் 2024 இல் -1.6% இலிருந்து நவம்பர் 2024 இல் -3.3% ஆக குறைந்தது.
நவம்பர் 2024 மாதத்தில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், உணவுப் பொருட்களின் பணவீக்கத்திற்கான பங்களிப்பு 0.19% ஆக இருந்தது.