கெம்ப்ட் வில்லே கிழக்கில் வாகனம் மோதியதில் ஒருவர் பலி
கிழக்கு நோக்கி வாகனத்தை ஓட்டிவந்த கெம்ப்ட் வில்லேவைச் சேர்ந்த 81 வயதான முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

கெம்ப்ட் வில்லேவுக்கு கிழக்கே வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 81 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வான்பியூரன் வீதிக்கு அருகாமையில் கவுண்டி வீதி 43 இல் மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு நோக்கிச் சென்ற வாகனம்ஒன்று மையக்கோட்டைத் தாண்டி, மேற்கு நோக்கிச் சென்ற வாகனத்தைப் பக்கவாட்டில் இடமாறி மற்றொரு வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதாக விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் சனிக்கிழமை காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
கிழக்கு நோக்கி வாகனத்தை ஓட்டிவந்த கெம்ப்ட் வில்லேவைச் சேர்ந்த 81 வயதான முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்ற இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.