மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்
வெடிப்புக்கான சரியான காரணம் தெளிவாகத்தெரியவில்லை. அதை அறிய விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரு வீட்டில் குண்டுவெடித்ததில் குறைந்தது ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முர்ஷிதாபாத்தின் ராம்கிருஷ்ணா பள்ளி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர், இதில் ஃபரித் ஷேக் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் காயமடைந்தார். வெடிப்புக்கான சரியான காரணம் தெளிவாகத்தெரியவில்லை. அதை அறிய விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்குப்பிறகு, ஷேக்கின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும்போது குண்டு வெடித்ததாக பாஜக குற்றம் சாட்டியது.
பாஜக எம்.எல்.ஏ.வும், மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, ஷேக் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார்.