Breaking News
டிசம்பரில் தேர்தலை நடத்த வங்கதேச அரசு ஆர்வம்: கலிதா ஜியாவின் கட்சி
பொதுத் தேர்தலுக்கான செயல் திட்டத்தை யூனுஸ் விரைவில் அறிவிப்பார் என்று பிஎன்பி எதிர்பார்க்கிறது என்று அதன் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வங்கதேசத்தில் டிசம்பர் மாதத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான செயல் திட்டத்தை யூனுஸ் விரைவில் அறிவிப்பார் என்று பிஎன்பி எதிர்பார்க்கிறது என்று அதன் பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இந்த விஷயத்தில் நாங்கள் மீண்டும் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். டிசம்பருக்குள் தேர்தலை நடத்த அவர்கள் முயல்கிறார்கள் என்று அவர் (யூனுஸ்) எங்களிடம் கூறினார்," என்று அவர் திங்களன்று கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து இடைக்கால நிர்வாகத்திடம் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.