Breaking News
ரஷ்ய பயங்கரவாதம் தானாக நின்றுவிடாது: ஜெலன்ஸ்கி
உள்ளூர் நேரப்படி 02.30 மணியளவில் தலைநகரை அதிர வைத்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன.

உக்ரைன் தலைநகர் மீது அதிகாலையில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் புதன்கிழமை குறைந்தது ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்குபேர் காயமடைந்தனர். இந்த ஏவுகணைத் தாக்குதல் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் பல தீ விபத்துகளைத் தூண்டியது என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி 02.30 மணியளவில் தலைநகரை அதிர வைத்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. தாக்குதல்களை முறியடிக்கவான் பாதுகாப்புப்படையினர் செயல்பட்டு வருவதாகஉள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"உக்ரைனுக்கு எதிரான இந்த ரஷ்ய பயங்கரவாதம் தானாகவே நிற்காது" என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தாக்குதலுக்குப் பிறகு கூறினார். போரை நியாயமாக முடிவுக்குக் கொண்டுவர பங்காளிகளிடையே ஒற்றுமையை வலியுறுத்தினார்.