கேரள தலித் சிறுமி மீது 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 44 பேர் கைது
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
பத்தனம் திட்டாவில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இதுவரை 44 பேரை கைது செய்துள்ளது. மாவட்ட இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) எஸ்.அஜீதா பேகம் 30 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. லுக்அவுட் சுற்றறிக்கைகள் மற்றும் இன்டர்போல் மூலம் ரெட்கார்னர்அறிவிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்படுவதாக டிஐஜி பேகம் தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 13 பேரை கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
"நாங்கள் விஞ்ஞான விசாரணையை நடத்தி வருகிறோம். குற்றம் சாட்டப்பட்ட எவரும் தப்ப மாட்டார்கள்" என்று அவர் உறுதியளித்தார்.