தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல: நாமல்
ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எதிர்வரும் இரண்டு தேர்தல்களையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முன்மொழிந்ததற்கு பதிலளிக்கும் வகையில் ராஜபக்சவின் கருத்துக்கள் வந்துள்ளன.
தேர்தலை பிற்போடுவது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகமொன்றின் அடிப்படைக் கோட்பாடுகளை கீழறுப்பதாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
"நிலைத்தன்மை மக்களின் விருப்பத்தின் மூலம் வர வேண்டும், அவர்களின் குரலைத் தாமதப்படுத்துவதன் மூலம் அல்ல" என்று அவர் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு பதிவில் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எதிர்வரும் இரண்டு தேர்தல்களையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க முன்மொழிந்ததற்கு பதிலளிக்கும் வகையில் ராஜபக்சவின் கருத்துக்கள் வந்துள்ளன.
நேற்று (28) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்றும் முன்மொழிந்தார்.
"இப்போது நாம் நாட்டை இந்த நொடிப்பு நிலையிலிருந்து காப்பாற்றி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்" என்று ரங்கே பண்டார கூறினார்.