Breaking News
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் என் 3 மகன்கள் கொல்லப்பட்டனர்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே
அல் ஜசீரா செயற்கைக்கோள் சேனலுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் ஹனியே இந்த மரணங்களை உறுதிப்படுத்தினார்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் புதன்கிழமை கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஹமாஸ் ஊடகங்கள் தெரிவித்தன.
அல் ஜசீரா செயற்கைக்கோள் சேனலுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் ஹனியே இந்த மரணங்களை உறுதிப்படுத்தினார். "ஜெருசலேம் மற்றும் அல்-அக்சா மசூதியை விடுவிக்கும் பாதையில் அவரது மகன்கள் தியாகிகளாகக் கொல்லப்பட்டனர்" என்று கூறினார்.
இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.