இராணுவ நாடுகடத்தல் விமானங்களை டிரம்ப் இடைநிறுத்தினார்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை குவாண்டநாமோ வளைகுடா அல்லது பிற இடங்களுக்கு கொண்டு செல்ல இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

ஜனவரி 20 அன்று பதவியேற்ற பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் கடுமையான சோதனைகள் மற்றும் நாடுகடத்தல்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்திச் சட்டவிரோதக் குடியேற்றத்தின் மீது ஒரு பெரும் ஒடுக்குமுறையைத் தொடங்கினார். டிரம்ப் அவரது முதல் மாதத்தில், சட்டப் பூர்வ அந்தஸ்து இல்லாத 37,660 பேர்களை நாடு கடத்தினார்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு அறிக்கையின்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை குவாண்டநாமோ வளைகுடா அல்லது பிற இடங்களுக்கு கொண்டு செல்ல இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
நாடுகடத்தலுக்கு இராணுவ விமானங்களை நம்பியிருப்பது செலவு மிகுந்ததாகவும் திறமையற்றதாகவும் நிரூபணமானது என்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டியது. நிர்வாகம் இன்னும் விரிவான நாடுகடத்தல் தரவுகளை வெளியிடவில்லை என்றாலும், நாடுகடத்தப்பட்டவர்களில் எத்தனை பேர் அமெரிக்காவிற்குள் புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.