Breaking News
ஆக்ரா விருந்தினர் குடியிருப்பில் தில்லி செவிலியர் தற்கொலை
ஆக்ராவில் உள்ள தனது பெற்றோரை சந்திக்க குசும் குமாரி வந்ததாக துணை காவல்துறை ஆணையர் ஆதித்யா சிங் தெரிவித்தார்.
ஆக்ராவில் உள்ள ஒரு விருந்தினர் குடியிருப்பில் 32 வயதான செவிலியர் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ஆக்ராவைப் பூர்வீகமாகக் கொண்ட குசும் குமாரி என்ற பெண் டெல்லியில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
ஆக்ராவில் உள்ள தனது பெற்றோரை சந்திக்க குசும் குமாரி வந்ததாக துணை காவல்துறை ஆணையர் ஆதித்யா சிங் தெரிவித்தார். அவர்களை சந்தித்த பிறகு, தான் எங்கு செல்கிறேன் என்பதை யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, கமலா நகர் பகுதியில் அமைந்துள்ள டோரன் விருந்தினர் குடியிருப்பில் ஒரு அறையில் அவர் இறந்து கிடந்தார். முதற்கட்ட விசாரணையில், காவல்துறையினர் இந்த வழக்கை தற்கொலை என்று கருதுகின்றனர்.