Breaking News
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு நியமனம்
தமிழரசுக் கட்சி வென்றுள்ள ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாகவே கலாநிதி ப.சத்தியலிங்கம் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி ப.சத்தியலிங்கம் 2024 பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட போதிலும், இலங்கைத் தமிழரசு கட்சி மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டமையால் விருப்பு வாக்குகளின் ஊடாக ஒரு ஆசனத்தை வெல்ல முடியாமல் போனது.
இதன்படி, தமிழரசுக் கட்சி வென்றுள்ள ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாகவே கலாநிதி ப.சத்தியலிங்கம் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளார்.