Breaking News
ஈராக்கில் துல்லிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா
ஈராக்கில் உள்ள 2 மையங்கள் மீது அமெரிக்க மத்திய உத்தரவுப் (கமாண்ட்) படைகள் தனித்தனியான, துல்லியமான தாக்குதல்களை நடத்தின.
ஈராக்கில் உள்ள 2 முகாம்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை பதிலடித் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஈராக்கில் உள்ள 2 மையங்கள் மீது அமெரிக்க மத்திய உத்தரவுப் (கமாண்ட்) படைகள் தனித்தனியான, துல்லியமான தாக்குதல்களை நடத்தின.
"நவம்பர் 21 அன்று ஈராக்கில் நடந்த தாக்குதல் உட்பட, அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படைகளுக்கு எதிராக ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதல்களுக்கு நேரடி எதிர்வினையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் அருகிலிருந்து கண்டம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.