Breaking News
வங்கதேச நாடாளுமன்றத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்
ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.

திங்களன்று நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் வங்கதேச நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுக் குழப்பத்தை உருவாக்கினர்.
ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமர் பதவியை விட்டு விலகினார். அவரது அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களில் இது நடந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டும், கோஷங்களை எழுப்பியவாறும் நாடாளுமன்றத்திற்குள் கும்பல் காட்சியளித்தது.