Breaking News
விஜயகாந்த் கொலை செய்யப்பட்டார்: அல்போன்ஸ் புத்திரனின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் குற்றச்சாட்டு
அல்போன்ஸ் எழுதியுள்ள பதிவில், “நான் கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயண்ட் அலுவலகத்தில் அமர்ந்து உங்களை அரசியலுக்கு வரச் சொன்னேன்.
நேரம், பிரேமம் போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவுகள் அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அல்போன்ஸ் எழுதியுள்ள பதிவில், “நான் கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயண்ட் அலுவலகத்தில் அமர்ந்து உங்களை அரசியலுக்கு வரச் சொன்னேன். கலைஞரை கொன்றது யார், இரும்பு பெண்மணி ஜெய லலிதாவை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். கேப்டன் விஜயகாந்தை கொலை செய்தது யார் என்பதை இப்போது கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் இதை புறக்கணிக்கிறீர்களா. அவர்கள் ஏற்கனவே இந்தியன் 2 செட்டில் ஸ்டாலின் சாரையும் கமல் சாரையும் கொல்ல முயன்றனர்.