Breaking News
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல்
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதுடன் மார்ச் மாதம் 2 வது வாரத்தில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பலமுனை போட்டி நிலவுகிறது. இதில் திமுகவை பொறுத்தவரை, மக்கள் நீதி மையம் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.