Breaking News
டிசம்பர் 2023 இல் சிறிலங்காவின் உத்தியோகபூர்வக் கையிருப்புச் சொத்துக்கள் 23.2% அதிகரிப்பு
2023 நவம்பரில் 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த சிறிலங்காவின் உத்தியோகபூர்வக் கையிருப்புச் சொத்துக்கள் 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
நவம்பர் 2023 முதல் டிசம்பர் 2023 வரை சிறிலங்காவின் உத்தியோகபூர்வக் கையிருப்புச் சொத்துக்கள் 23.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 நவம்பரில் 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த சிறிலங்காவின் உத்தியோகபூர்வக் கையிருப்புச் சொத்துக்கள் 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
"இது 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சமமான, சீனாவின் பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சீனாவின் இடமாற்று வசதியை உள்ளடக்கியது, இது பயன்பாட்டின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.