பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் கிறிஸ்தவ இளைஞரை அடித்து கும்பல் உதைத்தது
சமூக ஊடகங்களில் பல காணொலிகள் கும்பல் வீடு மற்றும் காலணி தொழிற்சாலையை எரிப்பதைக் காட்டின.

பாகிஸ்தானின் சர்கோதா நகரில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஒரு கிறிஸ்தவர் தாக்கப்பட்டார். அவரது வீடு மற்றும் தொழிற்சாலைக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.
சனிக்கிழமை காலை குழந்தைகள் உட்பட கோபமடைந்த கும்பல் கிறிஸ்தவ மனிதரின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது உடமைகளை சேதப்படுத்தி, அதற்குள் இருந்த ஒரு காலணித் தொழிற்சாலைக்கு தீ வைத்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பல காணொலிகள் கும்பல் வீடு மற்றும் காலணி தொழிற்சாலையை எரிப்பதைக் காட்டின. சிலர் திருடக்கூடாது என்று கூறுவதும், ஷூ பெட்டிகளில் பின்னர் பதுங்குவதும் காட்டப்படுகிறது.
மற்றொரு காணொலியில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் தெருவில் கிடப்பதையும், குர்ஆனை இழிவுபடுத்தியதற்காக மக்கள் அவரை உதைப்பதையும், சபிப்பதையும் காட்டுகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை செயலாளர் நூர்-உல்-அமின் மெங்கல் ஒரு செய்திக்குறிப்பில், "பாகிஸ்தான் நம் அனைவருக்கும் சொந்தமானது; மதம் என்ற போர்வையில் எந்த அநீதியும் சகித்துக் கொள்ளப்படாது. முழுமையான விசாரணைக்குப் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.