Breaking News
தேசிய காணி ஆணைக்குழு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பேன்: ரணில் உறுதி
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆணைக்குழுவின் ஊடாக நீதியரசர் நவாஸ் செயற்படுவார் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அரசாங்கத்தின் கீழ் தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆணைக்குழுவின் ஊடாக நீதியரசர் நவாஸ் செயற்படுவார் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியாது என்றும் அபிவிருத்தியும் தேவை என்றும் அவர் கூறினார்.
இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி நகரும் போது வடக்கு பின்தங்கியே இருக்கும். வடக்கில் நிலவும் அரசியல் பிரச்சினைகளை மாத்திரமல்ல வளர்ச்சிப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம்.