'கோயில்களை இடிக்கும் மாணவர்களுக்கு நாங்கள் கற்பிக்க மாட்டோம்: சிறுவனை இடைநீக்கம் செய்த உபி பள்ளி முதல்வர்
காணொலியில் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த சம்பவம், குழந்தைகள் வளரும்போது "கோயில்களை இடிக்கும்" குழந்தைகளுக்குக் கற்பிக்க மாட்டோம் என்று முதல்வர் குழந்தையின் தாயிடம் கூறுவதைக் காட்டுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர், தனது உணவுப் பாத்திரத்தில் (டிபனில்) அசைவ உணவை கொண்டு வந்ததற்காக நர்சரி மாணவரை இடைநீக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காணொலியில் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த சம்பவம், குழந்தைகள் வளரும்போது "கோயில்களை இடிக்கும்" குழந்தைகளுக்குக் கற்பிக்க மாட்டோம் என்று முதல்வர் குழந்தையின் தாயிடம் கூறுவதைக் காட்டுகிறது.
அந்தக் காணொலியில், குழந்தை மற்ற மாணவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாக முதல்வர் குற்றம் சாட்டுவதையும், மற்றவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவேன் என்று சிறுவன் கூறியதாகக் கூறுவதையும் கேட்கலாம். அதற்குப் பதிலளித்த தாய், பள்ளியில் மாணவர்கள் இந்து-முஸ்லிம் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினார். மேலும் தனது மகனை மற்றொரு குழந்தை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் காணொலிக்கு உள்ளூர்க் காவல்துறையினர் பதிலளித்துள்ளனர், மேலும் மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் (டிஐஎஸ்) நடவடிக்கை எடுத்துள்ளார். பள்ளி முதல்வர் சிறுவனின் தாயிடம் தனது மகனை பள்ளியில் இருந்து நீக்குவது இறுதி முடிவு என்று கூறியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இது குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்