Breaking News
பன்னு ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பலி
உயிரிழந்தவர்களில் 7 ராணுவ வீரர்களும், ஒரு துணை ராணுவ வீரரும் அடங்குவர்.

கைபர் பக்துன்க்வாவில் உள்ள பன்னு கன்டோன்மென்ட்டில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது எட்டு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
ராய்ட்டர்ஸ் தகவல்படி, ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தைச் சுற்றுச்சுவர் மீது மோதியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
உயிரிழந்தவர்களில் 7 ராணுவ வீரர்களும், ஒரு துணை ராணுவ வீரரும் அடங்குவர்.
பின்னர், பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பன்னு தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய 10 பேரையும் பாதுகாப்புப் படையினர் கொன்றனர் என்று கூறியது.
"இந்தச் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள பதில் பெரிய பேரழிவைத் தடுத்து, விலைமதிப்பற்ற அப்பாவி உயிர்களைக் காப்பாற்றியது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.