Breaking News
வித்யா கொலை வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
மேல்முறையீட்டு மனுக்களை ஆகஸ்ட் 25, 2025 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மேல்முறையீட்டு மனுக்களை ஆகஸ்ட் 25, 2025 அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று (பிப்ரவரி 06) பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.