கேப் பிரெட்டனில் கொலை செய்தவர் கைது: காவல்துறையினர்
விசாரணையின் பின்னர், சிட்னியைச் சேர்ந்த 49 வயதான ஒருவரைச் சனிக்கிழமை காலை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிட்னியில் வெள்ளிக்கிழமை சமூகத்தில் ஒரு மரணம் நிகழந்ததை அடுத்து ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிட்னியில் உள்ள ஸ்டேட் தெரு மற்றும் டியூக் தெரு சந்திப்புக்கு அருகே நள்ளிரவுக்கு சற்று முன்பு மயக்கமடைந்த ஆண் ஒருவர் தொடர்பான புகாருக்குப் பதிலளித்ததாகக் கேப் பிரெட்டன் பிராந்திய காவல்துறை ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 51 வயதான ஒருவரைக் கண்டதாகவும், அவர் பதிலளிக்க முடியாததாகவும், கடுமையான காயங்களுடன் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த மனிதர் கேப் பிரெட்டன் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பின்னர் இறந்தார்.
விசாரணையின் பின்னர், சிட்னியைச் சேர்ந்த 49 வயதான ஒருவரைச் சனிக்கிழமை காலை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை காவலில் வைக்கப்பட்ட அந்த மனிதர், திங்கட்கிழமை காலை சிட்னி நீதி மையத்தில் நிறுத்தப்படவுள்ளார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.