அடுத்தடுத்து அனர்த்தங்களை சந்திக்கும் கனேடிய மாகாணம்

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணம் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது.
மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ பரவுகைகளினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
எனினும் தற்பொழுது கடுமையான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், கடுமையான மழையுடன் இடி மின்னல் தாக்கம் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடி மின்னல் தாக்கத்தினால் தீ பரவுகை ஏற்படவும் சாத்தியமுண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணம் அடுத்தடுத்து இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தின் அநேக பகுதிகளில் ஒரளவு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.