Breaking News
தேசபந்து தென்னகோனை விசாரிக்கும் குழுவின் முதலாவது கூட்டம்
இந்த குழு ஏப்ரல் 25 ஆம் தேதி மீண்டும் கூடும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னகோன் தொடர்பில் இடம்பெற்ற அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு முதற்தடவையாக புதனன்று (23) பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியது.
உயர் நீதிமன்ற நீதியரசர் பீ.பி.சூரசேன அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணைக் குழுவில் நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி.இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் (பதவி வழி) திரு.ஈ.டபிள்யூ.எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த குழு ஏப்ரல் 25 ஆம் தேதி மீண்டும் கூடும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்பு துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.