கனேடிய பாடகர் ஏ.பி.தில்லானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் கைது
கைது செய்யப்பட்ட குற்றவாளி வின்னிபெக்கைச் சேர்ந்த 25 வயதான அப்ஜீத் கிங்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடகர் ஏ.பி.தில்லானின் இல்லத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கனேடியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் மற்றொரு சந்தேகக் குற்றவாளி தலைமறைவாக உள்ளார்.
"அக்டோபர் 30, 2024 அன்று, செப்டம்பர் மாதம் கோல்வுட், ரேவன்வுட் சாலையின் 3300 புளோக்கில் ஒரு வீட்டிற்குள் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கியை செலுத்தியது மற்றும் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த குற்றம் செப்டம்பர் 20, 2024 அன்று நடந்தது" என்று கனேடியக் காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளி வின்னிபெக்கைச் சேர்ந்த 25 வயதான அப்ஜீத் கிங்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் மீது "வேண்டுமென்றே துப்பாக்கியை பயன்படுத்தியது மற்றும் தீ வைத்தது" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.