Breaking News
உதயங்க வீரதுங்க யார்? என்று கேட்கிறார் சாகர காரியவசம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராகவும், நாமல் ராஜபக்ஷவை பிரதமராகவும் நியமிக்கவுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி காரியவசத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்காத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், எனவே கட்சித் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராகவும், நாமல் ராஜபக்ஷவை பிரதமராகவும் நியமிக்கவுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி காரியவசத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உதயங்க வீரதுங்கவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க காரியவசம் மறுத்துவிட்டார்.