Breaking News
மாலத்தீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி விக்ரமசிங்க தனிப்பட்ட தொலைபேசி அழைப்பின் ஊடாக ஜனாதிபதி முய்சுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்சு அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க தனிப்பட்ட தொலைபேசி அழைப்பின் ஊடாக ஜனாதிபதி முய்சுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களின் உரையாடலின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க, தற்போதுள்ள நெருங்கிய மற்றும் நட்புரீதியான இருதரப்பு உறவுகளை ஒரு வலுவான மற்றும் பன்முகப் பங்காளித்துவமாக உயர்த்துவதற்கான தனது இதயப்பூர்வமான விருப்பத்தை வெளிப்படுத்தினார்.