காசாவில் உதவி பெறுவோர் உயிரிழந்தமை தொடர்பில் சிறிலங்கா ஆழ்ந்த கவலை
பொதுமக்களின் துன்பத்தைத் தணிக்க உடனடிப் போர் நிறுத்தம் மற்றும் காசாவுக்கு கட்டுப்பாடற்ற மனிதாபிமான அணுகலுக்கான தனது அழைப்பை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்துகிறது.
காசாவில் உதவிகளை பெற்றுக்கொள்ள காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை தொடர்பில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய சிறிலங்கா, சம்பவம் தொடர்பான விசாரணைக்கான அழைப்பில் இணைந்துள்ளது.
சனிக்கிழமை (மார்ச் 02) ஒரு அறிக்கையை வெளியிட்ட வெளியுறவு அமைச்சகம், சமீபத்திய சம்பவம் காசா மீது விதிக்கப்பட்ட முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய உடனடி தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அதன் பொதுமக்களுக்கு உணவு, நீர், மருந்து, மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான அணுகலை பறிக்கிறது என்று கூறியது.
பொதுமக்களின் துன்பத்தைத் தணிக்க உடனடிப் போர் நிறுத்தம் மற்றும் காசாவுக்கு கட்டுப்பாடற்ற மனிதாபிமான அணுகலுக்கான தனது அழைப்பை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்துகிறது.
மேலும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தேவையான ஆதரவை வழங்குவதற்காக ஐ.நா நிறுவனங்களின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கும் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட "காசா சிறுவர் நிதியம்" என்ற கருணை முன்னெடுப்பை நிறுவுவதற்குச் சிறிலங்கா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.