சிம்மாசன உரை நிகழ்த்த மன்னர் சார்லஸ் கனடா வருகை
பொது ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) மேரி சைமன் மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அரச வருகையை உறுதிப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

மன்னர் சார்லஸ் இம்மாத இறுதியில் கனடா சென்று மே 27 அன்று அரியணையில் இருந்து உரையாற்றுவார் என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
"இந்த வரலாற்று கௌரவம் நமது காலத்தின் கனத்துடன் பொருந்துகிறது" என்று பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை செய்தியை அறிவித்தபோது கூறினார். இந்த பயணத்தில் ராணி கமீலாவும் கலந்து கொள்வார் என்றும் அவர் கூறினார்.
பொது ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) மேரி சைமன் மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அரச வருகையை உறுதிப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
"மாட்சிமை தங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அரசி கமிலா ஆகியோரை கனடாவுக்கு வரவேற்பதில் நானும் விட்டும் மகிழ்ச்சியடைவோம். எங்கள் கனேடிய அடையாளம் எங்கள் அரசியலமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மேலும் இந்தப் பயணம் கனடாவுக்கும் மன்னருக்கும் இடையிலான நீடித்த உறவை எடுத்துக்காட்டுகிறது, "என்று அவர் கூறினார்.