ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை எதிர்த்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா வழக்கு
சிறிலங்காவின் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களின்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா கூறுகிறது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா புதன்கிழமை (மே 10) பல முக்கிய கவலைகளை எடுத்துரைத்து, ஊழல் எதிர்ப்பு மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை (SC SD 19/2023) தாக்கல் செய்தது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு மசோதாவை வரவேற்பதாகக் கூறிய சிவில் சமூக அமைப்பு, சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரணானது என்ற அடிப்படையில், தனது மனுவின் மூலம் சவால் செய்தது.
சிறிலங்காவின் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களின்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா கூறுகிறது.
28(3), 161 மற்றும் 119 ஆகிய உட்பிரிவுகள் உட்பட மொத்தமாக ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் 37 சரத்துக்களை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா சவால் செய்துள்ளது.