பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை செப்டம்பருக்குப் பிறகு எதிர்பார்க்கப்படுகிறது: இராஜாங்க அமைச்சர்
இலங்கை மத்திய வங்கி, நிதியமைச்சு மற்றும் அதன் அமைச்சர் ஆகியோர் அடங்கிய முதல் மீளாய்வு செப்டெம்பர் 11 முதல் 19 வரை எட்டு நாட்களுக்கு நடைபெற உள்ளதாக சியமபலபிட்டிய தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்ட முதல் மீளாய்வுக்குப் பின்னர், பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணையை இலங்கை பெற வாய்ப்புள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி, நிதியமைச்சு மற்றும் அதன் அமைச்சர் ஆகியோர் அடங்கிய முதல் மீளாய்வு செப்டெம்பர் 11 முதல் 19 வரை எட்டு நாட்களுக்கு நடைபெற உள்ளதாக சியமபலபிட்டிய தெரிவித்தார்.
"இந்தத் திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். மதிப்பாய்விற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்பது நிபந்தனைகளை நாங்கள் ஒப்புக்கொண்டோம், அதை நாங்கள் செய்துள்ளோம். இந்த திட்டத்தில் எங்கள் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதை பன்னாட்டு நாணய நிதியம் பார்க்க முடியும்”, என்றார்.
சிறிலங்காவுக்குக் கிடைக்க வேண்டிய 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் இரண்டாம் தவணை குறித்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், இரண்டாவது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்பார்க்கப்படுவதாக விளக்கமளித்தார்.
"செப்டம்பரில் மதிப்பாய்வு செய்த பிறகு இந்த நிதிகளை நாங்கள் பெறுவோம் என்று நான் நம்புகிறேன்", என்று அவர் கூறினார்.