டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த படகு அணிவகுப்பில் நாஜி ஸ்வஸ்திகா கொடிகள் காணப்பட்டன
சூரியக் கண்ணாடியுடன் (சன்கிளாசு) இரண்டு தாடி வைத்த ஆண்கள் உட்பட ஐந்து நபர்களும், முகக்கவசம் அணிந்த மூன்று கூடுதல் மனிதர்களும் அணிவகுப்பில் சேர முயற்சிப்பதைக் காணொலிகள் காட்டின.
புளோரிடாவின் பாம் பீச்சில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகு அணிவகுப்பில் நாஜி ஸ்வஸ்திகா கொடிகளுடன் ஒரு படகு சேர முயன்றது. முகமூடி அணிந்த மனிதர்கள் 'வெள்ளை அதிகாரம்', 'வாழ்க ட்ரம்ப்' மற்றும் 'அமெரிக்காவை மீண்டும் வெள்ளையின நாடாக்குங்கள்!' என்று கோஷமிடுவதைக் காட்டும் பல காணொளிகள் ஆன்லைனில் வெளிவந்தன.
சூரியக் கண்ணாடியுடன் (சன்கிளாசு) இரண்டு தாடி வைத்த ஆண்கள் உட்பட ஐந்து நபர்களும், முகக்கவசம் அணிந்த மூன்று கூடுதல் மனிதர்களும் அணிவகுப்பில் சேர முயற்சிப்பதைக் காணொலிகள் காட்டின.
தனிநபர்கள் நாஜி ஸ்வஸ்திகா கொடிகளை படகில் கட்டியிருந்தனர். அத்துடன் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் கொடிகள் மற்றும் 'அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்' என்ற செய்தியை ஏந்திச் சென்றனர். டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபோது அந்த ஆட்கள் இனவெறி அவதூறுகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
படகு அணிவகுப்பின் அமைப்பாளர் கார்லோஸ் கவிடியா, படகில் இருந்தவர்கள் டொனால்ட் டிரம்புக்காக நடத்தப்பட்ட படகு அணிவகுப்பின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார். ட்ரம்ப் ஆதரவாளருக்கு சொந்தமான ஒரு பெரிய படகு நவ-நாஜிக்களை படகின் உந்துவிசைகளால் கடைந்தெடுக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு நனைப்பதைக் காட்டும் ஒரு காணொலியை அவர் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
"இந்தத் தேசபக்தர்கள் உள்ளே வந்த ஊடுருவல்காரர்களை கவனித்துக்கொண்டனர். எங்களுடன் இருப்பது போல் நடித்து, முகமூடிகளை அணிந்து, நாஜிக்களை ஆதரிக்கும் பயங்கரமான கொடிகளை வைத்திருந்தனர்!" காணொலியைப் பகிரும் போது கவிடியா கூறினார்.