மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை வழங்குவேன்: திலித் உறுதி
"ஒரு நாள் இந்த நாட்டை சரிசெய்ய முடியும் என்று நினைத்து அரசியல்வாதிகளுக்கு நாங்கள் உதவினோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு துரோகம் செய்தனர்," என்று அவர் கூறினார்.

சர்வஜன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீர மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
நேற்று (17) யட்டியாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த நாட்டின் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இந்த நாட்டின் அப்பாவி மக்களை இனியும் துன்புறுத்த வைக்க முடியாது என்றும் தெரிவித்தார். "அதற்காக, நீங்கள் ஒரு மாற்றத்தைக் கேட்டீர்கள். அதனால்தான் 225 பேரையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்.
"ஒரு நாள் இந்த நாட்டை சரிசெய்ய முடியும் என்று நினைத்து அரசியல்வாதிகளுக்கு நாங்கள் உதவினோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு துரோகம் செய்தனர்," என்று அவர் கூறினார்.
தனது சொத்துக்களை வெளிப்படுத்தியே அரசியலுக்கு வந்ததாக ஜயவீர குறிப்பிட்டுள்ளார். "மற்ற வேட்பாளர்களும் சொத்து அறிவிப்புகளை வழங்கியுள்ளனர். முதல் மூவரும் 200,000 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். என்ன ஒரு சோகமான நிலைமை.