Breaking News
வியத்புர வீடுகள் ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியானது
வியத்புர வீடமைப்புத் தொகுதியின் 5 ஆம் தொகுதியில் வீடுகளை வழங்குவதற்கு வசதியளிக்குமாறு மொத்தம் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நட்டஈடுக்கு மேலதிகமாக 'அரகலய' எதிர்ப்பு இயக்கத்தின் போது தீ விபத்துக்குள்ளான அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வியத்புர வீடமைப்புத் தொகுதியில் இருந்து வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (7) பாராளுமன்ற அமர்வின் போது தெரிய வந்தது.
பன்னிபிட்டிய, வீர மாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீடமைப்புத் தொகுதியின் 5 ஆம் தொகுதியில் வீடுகளை வழங்குவதற்கு வசதியளிக்குமாறு மொத்தம் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போதைய பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் விளைவாக, இந்த எம்.பி.க்களுக்கு இந்த வளாகத்தில் இருந்து வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.