காணாமல் போனோரின் குடும்பங்களுக்காக முதலாவது தேசிய மாநாடு சிறிலங்காவில் நடைபெற்றது
பொதுவான சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அவற்றை எவ்வாறு கூட்டாக சமாளிப்பது என்பது குறித்தும் இந்த மாநாடு மிகவும் தேவையான மனிதாபிமான இடத்தை வழங்கியது என்று செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதலாவது தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) அனுசரணையுடன் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் போன நபர்களின் 51 குடும்பங்களை ஒன்றிணைத்தது.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பிற சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்களுடன் தொடர்புகொள்வதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடுவதில் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், அவற்றை எவ்வாறு கூட்டாக சமாளிப்பது என்பது குறித்தும் இந்த மாநாடு மிகவும் தேவையான மனிதாபிமான இடத்தை வழங்கியது என்று செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதி மற்றும் இருப்பிடத்தை அறிய வேண்டியதன் அவசியத்தை பங்கேற்பாளர்கள் மீண்டும் வலியுறுத்தினர் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.