Breaking News
கட்-அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் தனது புகைப்படத்தை வைக்க வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு
சக அரசியல் தலைவர்கள் தங்கள் புகைப்படங்களை பிரச்சாரப் பொருட்களில் சேர்ப்பதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளம்பரப் பலகைகள், கட்-அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் தனது படங்களை பயன்படுத்தக் கூடாது: ஜனாதிபதி உத்தரவு.
சக அரசியல் தலைவர்கள் தங்கள் புகைப்படங்களை பிரச்சாரப் பொருட்களில் சேர்ப்பதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுலோக அரசியலை விட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி விக்கிரமசிங்க, இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், முழக்கங்கள் மற்றும் கட்-அவுட் அடிப்படையிலான அரசியலுக்கு தனது நீண்டகால எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.