லண்டனில் ஹரிஷ் சால்வேவுக்கு திருமணம்
திருமண விழாவில் நீதா அம்பானி, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, உஜ்வாலா ராவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, ட்ரினாவை லண்டனில் ஞாயிற்றுக்கிழமை தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டார். ஒரு காணொலியில், ஹரிஷ் சால்வே தனது மனைவி த்ரினாவுடன் நின்று அவரது நெற்றியில் முத்தமிடுவதைக் காண முடிந்தது.
திருமண விழாவில் நீதா அம்பானி, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, உஜ்வாலா ராவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் லலித் மோடி மற்றும் அவரது காதலியும் மாடலுமான உஜ்வாலா ரவுத் ஆகியோர் புகைப்படம் எடுத்தனர்.
சால்வேக்கு இது மூன்றாவது திருமணம். சால்வேவும் அவரது முதல் மனைவி மீனாட்சியும் 38 வருட திருமணத்திற்குப் பிறகு ஜூன் 2020 இல் விவாகரத்து செய்தனர். அதே ஆண்டில் அவர் கரோலின் ப்ராசார்ட்டை மணந்தார். சால்வே மற்றும் அவரது முன்னாள் மனைவி மீனாட்சிக்கு சாக்ஷி மற்றும் சானியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.