Breaking News
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 4-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
கணிக்க முடியாத அளவுக்கு மழைப்பொழிவு இருப்பதால், குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் முதல் வாரங்களில் மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.