Breaking News
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்குப் பிடியாணை
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரியது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட பல வைரல் ஆபாச காணொலிகள் கடந்த மாதம் வெளிவந்ததை அடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரியது.
கர்நாடகாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கு முன்னதாக 33 வயதான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பல காணொலிகள் வலம் வரத் தொடங்கின. ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார்.