Breaking News
சிறிலங்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

எரிசக்தி, வர்த்தகம், இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா வந்தடைந்தார். இந்த பயணத்தின்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமும் இதுவாகும்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சுதந்திர தின சதுக்கத்தில் பிரதமர் மோடியை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரவேற்றார். பாங்காக்கில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடி 3 நாள் பயணமாகச் சிறிலங்கா வந்துள்ளார்.