Breaking News
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது
மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையே ஒரு பன்னாட்டு அதிவேக பயணிகள் படகுச் சேவை, ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 14, 2023 சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது .
மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதிவேகக் கப்பல் (HSC) செறியபாணி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 50 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் காலை 8.15 மணியளவில் தனது பயணத்தைத் தொடங்கியது.