Breaking News
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது
சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் வந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் ஆகியோர் காவல்துறை சட்டவிரோதச் சொத்து விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்கள் வந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புதன்கிழமை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.