Breaking News
ஐரோப்பிய கால்பந்தில் இருந்து வெளியேறிய மெஸ்ஸி

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, இன்டர் மியாமி கால்பந்தாட்ட அணியில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறினார்.
மீண்டும் தனது பழைய அணியான பார்சிலோனா அணியுடன் இணைவார் என்று எதிரிபார்க்கப்பட்ட நிலையில் தான்
இன்டர் மியாமி அணியில் இணைவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் கனடாவில் நடைபெற உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டுக்கான கால்பந்தாட்ட உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றமை குறிப்பிடத்தக்கது