Breaking News
டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை எதிர்கொள்ள ஒரு வலுவான பெண் முகமாக அவரது பெயர் முன்மொழியப்பட்டது.

முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி ஞாயிற்றுக்கிழமை டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகக் கட்சி எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டார். சபையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவராக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் அதிஷி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை எதிர்கொள்ள ஒரு வலுவான பெண் முகமாக அவரது பெயர் முன்மொழியப்பட்டது.